Saiva Perumakkal Peravai

வாழ்க்கை முன்னேற்றம்

சைவப் பெருங்குடி மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுதல்.

பண்டை காலம்தொட்டு இலக்கியங்களிலும் வரலாறுகளிலும், எல்லா வகையாலும் சிறப்பித்துக் கூறப்பட்ட சைவப் பெருங்குடி, வணிகம், அலுவல், வேளாண்மை, நாகரீகம், பண்பாடு, ஒப்புரவு, மரப்பொழுக்கம் (கலாச்சாரம்), அறிவியல் ,நலமுறை முதலிய பல துறைகளிலும் சிறந்து வாழ்வதற்கு ஆவன செய்தல்.

கல்வி

சைவப் பெருமக்களின் கல்வி அபிவிருத்திக்குப் பாடுபடுதல்.

மேற்படிப்பிற்கு ஆன விபரங்களை சேகரித்து கொடுப்பதுடன், மேற்படி படிப்பிற்க்குச் செல்ல விரும்பும் சமூக மாணவர்களுக்கு நிதி உதவி வசதிகள் செய்தல்.

வெளி நாடுகளில் கல்வி பயில்வதர்க்கும் தொழில் கற்பதற்கும் உள்ள வசதிகளையும் செய்தல், சேகரித்துக் கொடுத்தால்.

இப்பேரவையே நிதி திரட்டி அதன் வாயிலாக உதவிச் சம்பளங்கள் அளித்தால்.

கல்வி பயிலும் சமூக மாணவர்களுக்கு ஊண், உடை, உறையுள் வசதிகள் செய்து கொடுத்தால்.

சமூக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆவண எல்லாம் செய்தல்.

வேலை

சமூக மக்களுள் வேலை தேடுவோருக்கு வேலை தேடிக் கொடுத்தால்.

சைவப் பெருமக்களின் உத்தியோக முன்னேற்ற நலன்களுக்கு உதவுதல்.

வணிகம்

வணிகம் செய்ய வீரும்புவோருக்கு மூல நிதி உதவி வசதிகள் செய்தல்.

தொழிலில் இறங்கும் சமூக மக்களுக்கு தொழில் விஸ்தரிப்பிற்கு உதவுதல்.

சைவப் பெருமக்கள் செய்துவரும் வேளாண்மை முனேற்றத்திற்கு ஆவன செய்தல்.

புதிய தொழில்களை செய்ய விரும்புவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் உதவிகளை பற்றிய விபரங்களைச் சேகரித்து கொடுத்தல்.

பல வகையான தொழில்கள் தொடங்குவதற்கு ஊக்கம் அளித்தல்.

செய்யும் தொழில்களின் தொடங்குவதற்கு உதவுதல்.

தேவையான விபரங்களை சேகரித்து கொடுத்தால்.