
வரலாறு
இப்பேரவை 1860-ம் ஆண்டு சொசைட்டி ரிஜிஸ்ட்ரேஷன் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. இப்பேரவை இலாபம் கருதி அமைக்கப்பட்டதல்ல. இதில் கிடைக்கப்பெறும் வருமானம் உறுப்பினர்களிடையே பகிர்ந்துகொள்ளக் கூடியதல்ல.
உறுப்பினர் ஆவதற்குரியவர் : சைவப் பெருமக்கள் சமூகத்தினரில் 18 வயதிற்கு மேற்பட்ட எல்லோரும் உறுப்பினராச் சேரலாம். அவ்வாறு சேர விரும்புபவர் மற்றும் ஓர் உறுப்பினரால் அறிமுகம் செய்யப் பெறுதல் வேண்டும்.
சைவ பெருமக்கள் பேரவை, கோவை
நோக்கங்கள்
1. சைவப் பெருங்குடி மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுதல்.
2. பண்டை காலம்தொட்டு இலக்கியங்களிலும் வரலாறுகளிலும், எல்லா வகையாலும் சிறப்பித்துக் கூறப்பட்ட சைவப் பெருங்குடி, வணிகம், அலுவல், வேளாண்மை, நாகரீகம், பண்பாடு, ஒப்புரவு, மரப்பொழுக்கம் (கலாச்சாரம்), அறிவியல் ,நலமுறை முதலிய பல துறைகளிலும் சிறந்து வாழ்வதற்கு ஆவன செய்தல்.
3. சைவப் பெருமக்கள் செய்யும் தொழிகள் சம்பந்தப்பட்டவரை.
- (அ) தேவையான விபரங்களை சேகரித்து கொடுத்தால்
- (ஆ) புதிய தொழில்களை செய்ய விரும்புவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் உதவிகளை பற்றிய விபரங்களைச் சேகரித்து கொடுத்தல்.
- (இ) பல வகையான தொழில்கள் தொடங்குவதற்கு ஊக்கம் அளித்தல்.
- (ஈ) செய்யும் தொழில்களின் தொடங்குவதற்கு உதவுதல்.
4. சைவப் பெருமக்களின் கல்வி அபிவிருத்திக்குப் பாடுபடுதல்.
- (அ) சமூக இளைஞர்கள் படிப்பிற்கு வேண்டிய பண உதவி செய்தல்
- (ஆ) மேற்படிப்பிற்கு ஆன விபரங்களை சேகரித்து கொடுப்பதுடன், மேற்படி படிப்பிற்க்குச் செல்ல விரும்பும் சமூக மாணவர்களுக்கு நிதி உதவி வசதிகள் செய்தல்.
- (இ) வெளி நாடுகளில் கல்வி பயில்வதர்க்கும் தொழில் கற்பதற்கும் உள்ள வசதிகளையும் செய்தல்,சேகரித்துக் கொடுத்தால்.
- (ஈ) உதவி சம்பளங்கள் அளிக்க ஏற்பாடு செய்தல்
- (உ) இப்பேரவையே நிதி திரட்டி அதன் வாயிலாக உதவிச் சம்பளங்கள் அளித்தால்.
- (ஊ) கல்வி பயிலும் சமூக மாணவர்களுக்கு ஊண், உடை, உறையுள் வசதிகள் செய்து கொடுத்தால்.
- (எ) சமூக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆவண எல்லாம் செய்தல்.
5. சைவப் பெருமக்களின் பொருளாதார முனேற்றத்திற்கு உழைத்தல்.
- (அ) சமூக மக்களுள் வேலை தேடுவோருக்கு வேலை தேடிக் கொடுத்தால்
- (ஆ) வணிகம் செய்ய வீரும்புவோருக்கு மூல நிதி உதவி வசதிகள் செய்தல்
- (இ) தொழிலில் இறங்கும் சமூக மக்களுக்கு தொழில் விஸ்தரிப்பிற்கு உதவுதல்
- (ஈ) சைவப் பெருமக்கள் செய்துவரும் வேளாண்மை முனேற்றத்திற்கு ஆவன செய்தல்
- (உ) சைவப் பெருமக்களின் உத்தியோக முன்னேற்ற நலன்களுக்கு உதவுதல்.
6. கோவை மாநகரிலும், மாவட்டத்திலும் வாழும் சைவப் பெருமக்கள் சமூகத்தினர் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, உதவியாக பழக ஒரு மத்திய அலுவலகம் அமைத்தல்.
7. இலவசப் படிப்பகங்கள், நூல் நிலையங்கள், பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள் முதலியன அமைத்தல்
8. கோவை மாநகரிலோ, அல்லது இதர நகரங்களிலோ வணிகம், கைத்தொழில், உத்தியோகம் ஆகிய தொழில் களில் ஈடுபட்டு குடும்பம் இன்றித் தனித்திருப்போருக்கு என இல்லம் அமைத்துக் கொடுத்தல்.
9. சைவப் பெருமக்கள் சமூகதிர்களிடையே, ஒருவருக்கொருவர் பொருள் நிலை ஏற்றத்தாழ்வு பாகுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாகவும், உறுதுணையாகவும், நன்முறையில் பேணுதற்கு உழைத்தால்.
10. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இப்பேரவை உறுப்பினர்கள் தங்குவதற்கு இடவசதிகள் செய்தல்.
ஆட்சியாண்டு
இப்பேரவையின் அலுவலாண்டு தைத்திங்கள் முதல் நாள் தொடங்கி மார்கழித் திங்கள் கடைசி நாளுடன் முடிவுறும் திருவள்ளுவர் ஆண்டேயாகும்.
இப்பேரவையில் சைவப் பெருமக்கள் மரபில் தோன்றியுள்ள சைவ வேளாளர், செட்டியார், முதலியார், குருக்கள், தேசிகர், ஓதுவார், கார்காத்தார், பண்டாரம், வைணப் பிள்ளை, பாண்டி மண்டல சைவப் பிள்ளை, வைணவ முதலியார், தொண்டைமண்டல சைவ முதலியார் மற்றம் இம்மரபில் அடங்கும் முத்தமிழ் நாட்டு சைவப் பெருங்குடியார் பிரிவனரில் 18 வயது நிரம்பிய, ஆண் பெண் இருபாலரும் உறுப்பினர் ஆவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
நடவடிக்கைகள் : இப்பேரவையின் எல்லா அலுவல்களும், நடவடிக்கைகளும் தமிழிலேயே நடைபெறும்.
